உள்ளாட்சி அமைப்பு
அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியம் ஆகும். அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில்
- அரியாங்குப்பம்
- அரியாங்குப்பம் மேற்கு
- காக்காயன்தோப்பு
- மணவெளி
- வீராம்பட்டினம்
- பூரணாங்குப்பம்
- நல்லவாடு
- தவளகுப்பம்
- ஆண்டியார்பாளையம்
- அபிஷேகப்பாக்கம்
- திம்ம நாயக்கன் பாளையம்
என்ற 11 ஊராட்சிகள் உள்ளது. ஊராட்சியிலிருந்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினரும், ஊராட்சி தலைவரும், ஊராட்சி உறுப்பினர்களும் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஊராட்சி ஒன்றியம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஊராட்சி ஒன்றியத் தலைவர் “ஆணையர்” என்ற அரசு அதிகாரி மூலம் நிறைவேற்றுவார்.