அரியாங்குப்பம்

25 01 2010

நிலவமைப்பு   

இந்திய ஆட்சிபரப்பிற்கு உட்பட்ட புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி நகரத்திற்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் புதுச்சேரி-கடலூர் சாலையில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் அமைவிடம் 11.54° N 79.48°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.   

வழித்தடம்   

கடலூர் – புதுச்சேரி தடத்திலுள்ள அனைத்து பேருந்துகளும் அரியாங்குப்பதில் நின்று செல்கிறது. மேலும் புதுச்சேரியிலிருந்து வீராம்பட்டினம், பாகூர், மடுகரை மற்றும் கரையாம்புத்தூர் செல்லும் பேருந்துகளிலும் அரியாங்குப்பம் செல்லலாம்.   

வரைபடம்   

புதுச்சேரி வரைபடம்

ஆட்சிப்பரப்பு /உள்ளாட்சி அமைப்பு   

அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியம் ஆகும். அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில்   

 1. அரியாங்குப்பம்
 2. அரியாங்குப்பம் மேற்கு
 3. காக்காயன்தோப்பு
 4. மணவெளி
 5. வீராம்பட்டினம்
 6. பூரணாங்குப்பம்
 7. நல்லவாடு
 8. தவளகுப்பம்
 9. ஆண்டியார்பாளையம்
 10. அபிஷேகப்பாக்கம்
 11. திம்ம நாயக்கன் பாளையம்

என்ற 11 ஊராட்சிகள் உள்ளது.   

முதன்மையான / பழமையான சிற்றூர்கள்   

 •  அரியாங்குப்பம்
 • காக்காயன்தோப்பு
 • வீராம்பட்டினம்
 • சின்ன வீராம்பட்டினம்
 • மணவெளி
 • ஓடைவெளி
 • கோட்டைமேடு
 • சின்ன கன்னிக்கோயில் (டோல்கேட்)
 • நோனாங்குப்பம்
 • எடையார்பாளையம்
 • பூரணாங்குப்பம்
 • புதுகுப்பம்
 • தவளகுப்பம்
 • தானம்பாளையம்
 • ஆண்டியார்பாளையம்
 • வள்ளுவர்மேடு
 • காசித்திட்டு
 • கோர்கமேடு
 • நல்லவாடு
 • நாணமேடு
 • அபிஷேகப்பாக்கம்
 • திம்ம நாயக்கன் பாளையம்
 • தேடுவார்நத்தம்

வருவாய் கிராமங்கள்   

 • அரியாங்குப்பம்
 • மணவெளி
 • பூரணாங்குப்பம்
 • தவளக்குப்பம்
 • அபிஷேகப்பாக்கம்
 • திம்மநாயக்கன் பாளையம்

அரசு நிறுவனங்கள்   

 • ஆரம்ப சுகாதார நிலையம், அரியாங்குப்பம்.
 • ஆரம்ப சுகாதார நிலையம், தவளக்குப்பம்.
 • அரியாங்குப்பம் காவல் நிலையம்
 • தவளக்குப்பம் காவல் நிலையம்
 • அஞ்சல் நிலையம், அரியாங்குப்பம்.
 • உழவர் உதவியகம், அரியாங்குப்பம்.
 • சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, அரியாங்குப்பம்.

வங்கிகள்   

 • இந்தியன் வங்கி, அரியாங்குப்பம்.
 • அரியாங்குப்பம் வேளாண் கூட்டுறவு வங்கி
 • புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி, அரியாங்குப்பம் கிளை.

பள்ளி / கல்வி நிறுவனங்கள் 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் :

 • தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணவெளி.
 • அரசு மேல்நிலைப் பள்ளி, தவளகுப்பம்.
 • அரசு உயர்நிலைப் பள்ளி, வீராம்பட்டினம்.
 • அரசு உயர்நிலைப் பள்ளி, பூரணாங்குப்பம்.
 • அரசு நடுநிலைப் பள்ளி, அரியாங்குப்பம்.
 • அரசு நடுநிலைப் பள்ளி, காக்காயன்தோப்பு.
 • அரசு நடுநிலைப் பள்ளி, மணவெளி.
 • அரசு ஆரம்பப் பள்ளி, ஓடைவெளி.
 • அரசு உயர்நிலைப் பள்ளி, நோணாங்குப்பம்.
 • அரசு உயர்நிலைப் பள்ளி, அபிசேகப்பாக்கம்.
 • பாரதியார் பல்கலைக்கூடம், அரியாங்குப்பம்.
 • தாகூர் கலைக் கல்லூரி, தவளக்குப்பம் கிளை.
 • தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியாங்குப்பம்.

தனியார் கல்வி நிறுவனங்கள் :

 • பாரத் ஆங்கில உயர்நிலைப் பள்ளி, அரியாங்குப்பம்.
 • இலட்சுமி ஆங்கில மேல்நிலைப் பள்ளி, அரியாங்குப்பம்.
 • மதர்லேண்ட் ஆங்கிலப் பள்ளி, அரியாங்குப்பம்.
 • நியுஜெனரேஷன் ஆங்கிலப் பள்ளி, காக்காயன்தோப்பு.
 • கலைமகள் ஆங்கிலப் பள்ளி, காக்காயன்தோப்பு.
 • இராதா ஆங்கிலப் பள்ளி, மணவெளி.

 

புதியதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகள்   

அரியாங்குப்பம்   

 • புடவைக்காரன் தோப்பு (அ) காமராசர் நகர்
 • சுப்பையா நகர்
 • அந்தோணியார் பேட்
 • காந்தி நகர்

அரியாங்குப்பம் மேற்கு   

 • பி.சி.பி. நகர்
 • அம்பேத்கர் நகர்
 • எம்.ஜி.ஆர். நகர்
 • சிவகாமி நகர்
 • அகத்தியர் நகர்
 • செயராம் நகர்
 • சீனுவாசன் நகர்
 • சிறீராம் நகர்
 • சொர்ணா நகர்

காக்காயன்தோப்பு   

 • இராதாகிருட்டிணன் நகர்
 • மாஞ்சாலை
 • இராம்சிங் நகர்

வீராம்பட்டினம்   

 • பவானி நகர்
 • நாகூரார் தோட்டம்
 • சுனாமி குடியிருப்பு

மணவெளி     

 • சிவலிங்கபுரம்
 • அன்னை இந்திரா நகர்
 • பூ.சுப்புராயன் நகர்
 • சண்முகா நகர்
 • சாய்பாபா நகர்
 • நேதாஜி நகர்
 • அரவிந்தர் நகர்

  

 

Advertisements